மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 12வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மெக் லானிங் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 38 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஸ்மாயில், பூஜா, மத்தியூஸ், சைகா இஷாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மேத்யூஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி ரன்கள் எடுக்காமல் தடுமாறி வந்தபோது அமன்ஜோத் 42 ரன்களும், சஜீவன் 24 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ராதா யாதவ், டைட்டாஸ் சாது, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.