கூட்டாளியான சீனாவை விட்டு வளர முடியாது: பன்னாட்டு நிறுவனங்கள்

Estimated read time 0 min read

7ஆவது பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களது ஜிங்தௌ உச்சிமாநாடு 17ஆம் நாள் நிறைவடைந்தது. சொந்த நாட்டில் வளர்வது என்றாலும் சரி, முதலீட்டை விரிவாக்குவது அல்லது உலக மேடைக்குள் நுழைவது என்றாலும் சரி, இவை அனைத்தும் கூட்டாளியான சீனாவை விட்டு விலகி இருக்க முடியாது என்று அதில் பங்கேற்ற பன்னாட்டு நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.

தற்போது, உலகப் பொருளாதார அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய சுற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில் புரட்சி ஆழமாக வளர்ந்துள்ளன. நிதானமான சந்தை, புத்தாக்க ஆற்றல் மற்றும் தரமான வணிக சூழலைத் தேடிப் பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆசை மென்மேலும் பெரிதாகியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை முன்னோக்கி வளர்ப்பது நடப்பு உச்சிமாநாட்டின் தலைப்பாகும். பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சித் தேவைக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாண்டு சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகும். சீனாவின் மிகப் பெரிய சந்தை, முழுமையான தொழில் சங்கிலி, திறப்பு மற்றும் ஒத்துழைப்பு சூழல் ஆகிவயற்றைச் சார்ந்திருந்து உலக வளங்களின் ஒதுக்கீட்டுத் திறனை உயர்த்த வேண்டுமென பன்னாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து தெரிவித்துள்ளன. நீண்டகாலமாகப் பார்த்தால், சீனாவின் திறப்புக் கதவு மேலும் பெரிதாகத் திறக்கப்படுவது சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளின் வளர்ச்சிக்கு நிலையான கொள்கை எதிர்பார்ப்புகளை வழங்கியுள்ளது.

You May Also Like

More From Author