திருப்பதி போறீங்களா..? டிசம்பர் மாதத்துக்கான தரிசன டோக்கன்கள் இன்று வெளியீடு..!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டோக்கன்கள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு போன்றவை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ‘எலக்ட்ரானிக் டிப்’ (குலுக்கல்) பதிவு 20-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.
அங்கப்பிரதட்சண டோக்கன்களும் இந்த மாதம் முதல் ஆன்லைனில் ‘எலக்ட்ரானிக் டிப்’ மூலம் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் 20 முதல் 22-ந் தேதி மதியம் 12 மணி வரை அதற்கான தொகையை செலுத்தினால் ‘லக்கி டிப்’பில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. உற்சவ சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டோக்கன் ஒதுக்கீடு 22-ந் தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்
மேலும் டிசம்பர் மாத ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒதுக்கீடு 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஏழுமலையானை தரிசிக்க சிறப்பு இலவச டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (ரூ.300) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் உள்ள அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே பக்தர்கள் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் போன்றவற்றை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author