ஓட்டுநர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கு புதிய அணையை தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தாலோ அல்லது புதுப்பிக்க வேண்டும் என்றாலோ, பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பின்னரே முடியும் என ஆணையர் அறிவித்துள்ளார்.
போலி மருத்துவர்களிடம் சான்றிதழ் பெறுவதை தடுக்கும் விதமாக சாரதி மென்பொருளில் மருத்துவர்கள், தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணை பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக்/மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எனவே பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்ணணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும்.