அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு சீன-அமெரிக்க கடல் சார் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறையின் பணிக்குழுவின் 2வது கூட்டம் மற்றும் ஆண்டுச் சந்துப்பு நவம்பர் 18 முதல் 20ஆம் நாள் நடைபெற்றது.
இதில் தற்போதைய சீன-அமெரிக்க கடல் மற்றும் வான் பாதுகாப்புச் சூழ்நிலை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, இரு நாடுகளின் இராணுவப் படைகள் கடல் மற்றும் வான் பகுதியில் சந்திப்புகள் பற்றியும், இரு நாட்டுக் கடல் சார் இராணுவப் பாதுகாப்பு விவகாரத்துக்கான நடவடிக்கைகள் முதலியவை பற்றியும் விவாதித்தனர்.
