சீனப் பொருளாதார அதிகரிப்புக்கு சர்வதேச அமைப்பு பாராட்டு

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் சீனக் கொள்கை ஆய்வு பணியகத்தின் தலைவர் மார்ஜிட் மொல்னர் அம்மையார் அண்மையில் சீன செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், இடைக்கால பார்வையுடன், உலகின் பொருளாதார அதிகரிப்புக்கு மிக பெரிய பங்கு ஆற்றும் நாடாக சீனா திகழ்கிறது என்றார்.


அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டின் முதலாவது காலாண்டு மற்றும் முதல் அரையாண்டில், சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 5.3 மற்றும் 5 விழுக்காடாகும். இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் திங்கள் வரை, சீனப் பொருளாதாரம் 4.8 விழுக்காடு அதிகரித்தது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் நாடுகள் மற்றும் ஜி 20 நாடுகளின் சராசரி வேகத்தை விட இது அதிகம் என்று தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில், உலகின் வளர்ச்சியில் சீனப் பொருளாதாரத்தின் பங்கு விகிதம் சுமார் 30 விழுக்காடாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


சீர்திருத்தத்தை சீனா மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவது, வணிக சூழலை மேம்படுத்தி. பொருளாதார வளர்ச்சியின் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் உற்பத்தி ஆற்றலை உயர்த்தி, நீண்டகால தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதற்குத் துணை புரியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author