அண்மையில் 7வது ச்சிங்டாவ் பன்னாட்டு நிறுவனங்களின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், 15வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் புதிய எதிர்காலத்தை நோக்கி கூட்டாக முன்னேறுவது என்ற கருப்பொருளின் கீழ் சீனாவில் வாய்ப்புகளை தேடியுள்ளனர்.
பிரான்ஸின் அல்ஸ்டாம் நிறுவனத்தின் சீனப் பகுதியின் தலைவர் கெங் மிங் கூறுகையில், தற்போதைய நிலையில், உள்ளூர் கூட்டாளிகளுடன் மேலும் ஒத்துழைத்து கூட்டாக புத்தாக்கத்தை மேற்கொள்ளவும், புத்தாக்க செயலிகளைச் சீனாவில் நடைமுறைப்படுத்தவும், அதே வேளையில் அவற்றை வெளிநாடுகளுக்கு அறிமுகம் செய்யவும் வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனாவிற்குள் நுழைவது முதல், சீனாவில் செயல்படுவது மற்றும் தற்போதைய சீனாவுடன் இணைந்து புத்தாக்கத்தை உருவாக்குவது வரை, சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி சீனப் பொருளாதார வளர்ச்சியுடன் ஒரே போக்கில் சென்றுள்ளது. எதிர்கால திட்டம் பற்றி குறிப்பிடுகையில், வெளிநாட்டு நிறுவனங்கள் சீனச் சந்தையில் வளர்வதற்கான வழிகாட்டலாக 15வது ஐந்தாண்டுத் திட்டம் மாறியுள்ளது என்று பன்னாட்டு நிறுவனத் தலைவர்கள் தெரிவித்தனர்.
