மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் விமானச் செயல்பாடுகள் தடைபட்டன.
இதனடியடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும்பையின் சில பகுதிகளில் வெறும் 6 மணி நேரத்தில் 300 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இ
இன்று காலை 7 மணி வரை மழை நீதித்ததால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பைக்கு இன்று கனமழைக்கான ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது.