9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா பிப்ரவரி 7ஆம் நாளிரவு ஹெய்லாங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் நடைபெறவுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் புருனே சுல்தான், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர், பாகிஸ்தான் அரசுத் தலைவர், தாய்லாந்து தலைமையமைச்சர், தென்கொரிய நாடாளுமன்றத்தின் தலைவர் முதலிய வெளிநாட்டுத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.