அமெரிக்க-சீன வணிக கவுன்சில் நடத்திய 2024ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட இரவு விருந்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 11ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த கவுன்சிலுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறிய அவர், சீன மற்றும் அமெரிக்க வணிக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு நீண்டகாலமாக ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவின் பல்வேறு துறையினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சீன மற்றும் அமெரிக்க உறவு, உலகில் மிகவும் முக்கியமான இரு தரப்பு உறவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பினால் நன்மைகள் ஏற்படும்,மோதலால் பாதிப்பு ஏற்படும். மோதலுக்குப் பதிலாக, பேச்சுவார்த்தையும் பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பும் சரியான தேர்வு ஆகும் என்று தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவுடனான தொடர்பை நிலைநிறுத்தவும், ஒத்துழைப்பை விரிவாக்கவும், கருத்து வேற்றுமையைக் கட்டுப்படுத்தவும், புதிய காலத்தில் இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று பழகும் சரியான வழியைத் தொடர்ந்து தேடவும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
தவிரவும், அதே நாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடன் இந்த கவுன்சிலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.