ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல்

தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை இறுதி செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அதற்கான சரியான நேரம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் விளைவாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திட்டம் உட்பட பல பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) Jake Sullivan,”ஈரானிய அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்றார்.

You May Also Like

More From Author