சீன-ஜெர்மனி உறவின் அடிப்படை ஆதாரம்: ஒத்துழைப்பு

ஜெர்மன் தலைமை அமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸ் 3 நாட்களில், அடுத்தடுத்து சீனாவின் 3 நகரங்களில் பயணம் மேற்கொண்டார்.

கடந்த சில நாட்களில், அவரது சீனப் பயணத்தில் மேலை நாடுகளின் செய்திஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தியது.
16ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங்கில், ஷோல்ஸுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன-ஜெர்மன் உறவின் முக்கிய திசை, சர்வதேச மற்றும் பிரதேசத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்ட பிரச்சினைகள் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஆழமாகப் பரிமாறி கொண்டுள்ளனர்.
பல முக்கிய பிரச்சினைகளில் சீனாவும் ஜெர்மனியும் ஒருமித்த நிலைப்பாடு கொண்டுள்ளன.

கையோடு கை கோர்த்து, உலகத்திற்கு மேலதிகமான நிலைப்பு மற்றும் உறுதித் தன்மையை இரு தரப்பும் கொண்டு வரலாம்.
தற்போது, சுமார் 5000க்கும் மேலான ஜெர்மன் தொழில் நிறுவனங்கள் சீனச் சந்தையில் இயங்கி வருகின்றன.

கடந்த ஆண்டில், சீனாவில் ஜெர்மனியின் நேரடியான முதலீட்டுத் தொகை, முந்தைய ஆண்டை விட 4.3 விழுக்காடு அதிகமாகும். இதன் மொத்தத் தொகை 1190 கோடி யூரோவாக, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளது.


சீனாவிலிருந்து விலகிச் செல்வது, வினியோக சங்கிலி துண்டிப்பது, அபாயத்தை நீக்குவது போன்ற கருத்துக்களை மேலை நாடுகளில் சிலர் பரப்பி வருகின்றனர். இதற்கு மாறாக, ஜெர்மனியின் பல தொழில் நிறுவனங்கள் இன்னும் சீனச் சந்தையின் மீது நம்பிக்கையை வைத்துள்ளன.


சீன-ஜெர்மன் ஒத்துழைப்பு, இரு தரப்புகளுக்கும் நன்மை பயக்கும். மேலும், இது, உலகத்திற்கும் நலன் தரும். ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னேற்றம் அடைந்து, சீன-ஐரோப்பிய ஒத்துழைப்புக்கு மேலும் முக்கிய பங்காற்றும். தவிரவும், உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும்‘இரைச்சலை’நீக்கவும் இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author