சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவி வரும் பல்வேறு நடுக்கங்களுக்கு மத்தியில், நடப்பு ஜூன் மாதத்தில் இந்தியா தனது முதன்மை எரிசக்தி சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 39 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தான இறக்குமதியை சாதனை அளவிற்குக் கொண்டு சென்றுள்ள இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவை பெருமளவில் குறைத்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பாதுகாப்பு நிச்சயமற்ற தன்மையே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும்.
அமெரிக்காவை ஓரங்கட்டிய இந்தியா! ஜூன் மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 39% உயர்வு
