வங்கதேசத் தலைமையமைச்சர் சீனப் பயணத்தின் ஏற்பாடுகள்

சீன அரசவை தலைமையமைச்சர் லி ச்சியாங்கின் அழைப்பின் பேரில், வங்கதேசத் தலைமையமைச்சர் தாரிக் ரஹ்மான் ஜூன் 24 முதல் 26ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இப்பயணத்தின் போது, தாரிக் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தலைமையமைச்சர் லி ச்சியாங், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் ஜாவ் லெஜி ஆகியோரை சந்தித்து, இருதரப்பு உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் குறித்து ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, இருநாட்டு உறவின் வளர்ச்சிக்கான வழிபாதையை கண்டடைவார்கள். மேலும், சீனாவின் டாலியன் நகரில் நடைபெறும் 17வது கோடைக்கால டாவோஸ் மன்றக் கூட்டத்தில் தாரிக் கலந்துகொள்ள உள்ளார். சீனாவும் வங்கதேசமும் பாரம்பரிய நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும், பன்முக உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் இருநாட்டு அரசு தலைவர்களின் உத்திப்பூர்வ வழிகாட்டலின் கீழ், இருநாட்டு உறவு தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இருநாட்டு அரசியல் பரஸ்பர நம்பிக்கை ஆழமடைவதோடு, பரந்த நடைமுறை ஒத்துழைப்பு சாதனைகள் இருநாட்டு மக்களுக்கும் உண்மையான நன்மைகளை வழங்கியுள்ளன என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author