விவசாயிகளுக்கான 8ஆவது அறுவடை விழா வரும் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், சீனத் தேசியளவில் விவசாயிகள், வேளாண் பணியில் ஈடுபடுவர்கள் உள்ளிட்டோருக்கு நல்வாழ்த்துகள் தெரிவித்தார்.
சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம், வேளாண் மற்றும் கிராமப்புறங்களின் நவீனமயமாக்கத்துடன் நெருக்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. பல்வேறு நிலை கட்சிக் கமிட்டி மற்றும் அரசாங்கங்கள், வேளாண்மை மற்றும் கிராமப்புறங்களின் வளரச்சிக்கு முன்னுரிமை அளித்து, வேளாண் துறையின் பன்நோக்கு உற்பத்தி ஆற்றலை வலுப்படுத்தி, கிராமப்புறங்களின் முழுமையான மறுமலர்ச்சியை உறுதியாக முன்னேற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.