சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானிய இராணுவம் உயிருள்ள மனிதர்கள் மீது சோதனை மேற்கொண்டதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஜூன் 22ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஜப்பானிய இராணுவத்தின் குற்றங்களை அதிகமான சான்றுகள் மேலும் அம்பலப்படுத்தியுள்ளன. ஜப்பானிய மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த இருண்ட, கொடூரமான வரலாற்றை அறிந்து கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானிய இராணுவம், பெருமளவில் உயிருள்ள மனிதர்கள் மீது மனிதநேயமற்ற கொடூரமான சோதனைகளை மேற்கொண்டு கிருமி போர்களைத் தொடுத்ததால், வரலாற்றின் இகழ்ச்சிச் சின்னத்தில் என்றுமே பதிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய தரப்பு தனது ஆக்கிரமிப்பு குற்றத்தை மீளாய்வு செய்து, இராணுவவாதத்தை விட்டு முற்றிலும் பிரிந்து, நடைமுறை செயல்களின் மூலம் ஆசிய அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
