ஈரான் உச்சநிலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளருடன் வாங் யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளி விவகார ஆணையப் பணியகத்தின் தலைவருமான வாங் யீ, ஜூன் 22ஆம் நாள் புதுதில்லியில் ஈரானின் உச்சநிலை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் நேஜாமிபூருடன் சந்திப்பு நடத்தினார்.

வாங் யீ பேசுகையில், ஈரானும் அமெரிக்காவும் பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளின் துணையுடன் புரிந்துணர்வு குறிப்பாணைக்குப் பிந்தைய பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் இயங்குமுறை குறித்து ஒத்த கருத்தை உருவாக்கியதை சீனா வரவேற்கிறது என்று கூறினார். ஈரானின் பன்முக உத்திநோக்கு கூட்டாளியாக சீனா எப்போதும் நியாயமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து, அமைதிக்கு உதவும் அனைத்து முயற்சிக்கும், சொந்த இறையாண்மை பாதுகாப்பு மற்றும் தேசிய கௌரவத்தை ஈரான் பேணிக்காப்பதற்கும், வளைகுடா மற்றும் பிரதேச நாடுகளுடனான உறவுகளை ஈரான் மேம்படுத்துவதற்கும் ஆதரவளிக்கிறது என்றும், சீனா சொந்த முறையிலான ஆதரவுடன், பிரதேச அமைதியை வெகு விரைவில் மீட்பதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்ற விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author