2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகமும் சீன ஊடகக் குழுமமும் கூட்டாக ஏற்பாடு செய்த “அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட கூட்டுச் செழுமையான உலகத்தைக் கையோடு கை கோர்த்து உருவாக்குதல்” என்னும் தெற்குலக நாடுகளுக்கான சிந்தனைக் கிடங்கு மன்றம் அக்டோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் சர்வதேசத் தொடர்பு துறை அமைச்சர் லியு ஜியான்சோவ், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹை சியோங் ஆகியோர் காணொளி வழி உரை நிகழ்த்தினர்.
ஷென் ஹை சியோங் கூறுகையில், தெற்குலக நாடுகள் முன்னேற்றத்துக்குரிய வளர்ச்சியைக் கூட்டாகத் தேடி வருகின்றன. அவர்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை ஆதரித்தும், நேர்மை மற்றும் நீதியைப் பேணும் வகையிலும் உரத்த குரலை எழுப்பப் பாடுபட என்றார். தெற்குலக நாடுகளின் சிந்தனை கிடங்குடன் கையோடு கை கோர்த்து மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்கி, அமைதி, பாதுகாப்பு, செழுமை, முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்ட அருமையான எதிர்காலத்தை முன்னேற்றுவதற்கு மாபெரும் பங்காற்றச் சீன ஊடகக் குழுமம் விரும்புகின்றது என்றார்.