2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, ஆசிய-பசிபிக் பிரதேசம், தூய்மை எரியாற்றல் துறையில் பெற்றுள்ள அறிவியல் ஆய்வு முடிவுகளின் எண்ணிக்கையானது முன்பை விட ஒரு மடங்கு அதிகரித்துள்ளதாக பிரிட்டனின் நேச்சர் இதழ் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு புதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
தரவுகளின்படி, 2010ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, உலகளவில் இத்துறை தொடர்பான ஆய்வு முடிவுகளின் எண்ணிக்கை, சுமார் 470 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை உலக எரியாற்றல் அறிவியல் ஆய்வு மேற்கொண்ட 100 முன்னேறிய நிறுவனங்களில் 63 நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்தவை என்றும் முன்னணியில் உள்ள முதல் 20 நிறுவனங்கள் அனைத்தும், சீனாவைச் சேர்ந்தவை என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படம்:VCG