சீன சர்வதேச விநியோக சங்கிலி கண்காட்சியின் தொடக்க விழாவில் டிங் சுயேசியாங் உரை

4வது சீன சர்வதேச விநியோக சங்கிலி கண்காட்சி 22ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், அரசவையின் துணை தலைமையமைச்சருமான டிங் சுயேசியாங் இக்கண்காட்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நெகிழ்வுத்தன்மையையும் நிலைத்தன்மையையும் பேணுவது, உலக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தரவாதமாகும் என்றும், இது அனைத்து நாடுகளின் மக்களின் பொது நலனுக்கும் உகந்தது என்றும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார். பொறுப்பான பெரிய நாடான சீனா, தனது முழுமையான தொழில்துறை அமைப்பு, பெரியளவிலான சந்தை உள்ளிட்ட சாதகங்களைப் பயனுள்ளதாக பயன்படுத்தி, உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் தடையற்ற இயக்கத்தையும் உறுதியுடன் பாதுகாக்க நடைமுறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு நாடும் ஒத்துழைப்பு சங்கிலியில் ஒரு பகுதியாகும் என்றும், உலகளாவிய தொழில் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் தடையற்ற இயக்கத்தையும் பேணுவதற்கு அனைத்து தரப்புகளின் கூட்டு முயற்சிகள் தேவை என்றும் டிங் சுயேசியாங் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author