சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும்.
எங்கெல்லாம் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்?
ஆசியாவில் சில நாடுகள், குறிப்பாக இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியாவில் சென்னை , கோவை, திருச்சி பெங்களூர் உட்பட பல பகுதிகளில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
இந்த முழு சந்திர கிரகணம், இந்திய நேரப்படி செப்.8 இரவு 9.58 க்கு ஆரம்பித்து செப்.9 அதிகாலை 1.26 க்கு முடிவடைகிறது. இது சுமார் 3மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கிறது.இது மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று கருதப்படுகிறது.
எப்படி காணலாம்?
இந்த சந்திர கிரகணத்தை தொலைநோக்கி, பைனாகுலர் அல்லது வெறும் கண்ணால் கூட நாம் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம்.
இதுபோன்ற இரவில் ஏற்படுகின்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பல வானியல் கருத்துக்களை குழந்தைகள் தெரிந்து கொள்ளமுடியும்.
இந்த அரிய நிகழ்வினை கண்டுகளிக்க மறந்து விடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 2028-ல்தான் நிகழும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.
