பகிரப்பட்ட வளர்ச்சிக்கான உலகளாவிய நடைமுறை மன்றத்தின் 3ஆவது உயர் நிலைக் கூட்டம் துவக்கம்

Estimated read time 0 min read

பகிரப்பட்ட வளர்ச்சிக்கான உலகளாவிய நடைமுறை மன்றத்தின் 3ஆவது உயர் நிலைக் கூட்டம் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது.

நடைமுறையை வழிக்காட்டலாக கொண்டு உலக வளர்ச்சிக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். உலகளாவிய அறைகூவல்களைச் சமாளிக்கவும், உலக வளர்ச்சியை முன்னேற்றுவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றவும், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றவும், சர்வதேச சமூகம் கூட்டாகச் செயல்பட வேண்டுமென அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

140க்கும் அதிகமான நாடுகள், சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகள், சிறப்பு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டனர். எண்ணியல் பொருளாதாரம், காலநிலை மாற்றம், பசுமை வளர்ச்சி, வளர்ச்சிக்கான நிதித் திரட்டல் முதலியவற்றைக் குறித்து நடப்புக் கூட்டத்தில் 3 கிளை மன்றக் கூட்டங்களும் நடைபெற உள்ளன. உலக வளர்ச்சிக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவது என்பது இம்மன்றத்தில் விவாதிக்கப்படும்.

Please follow and like us:

You May Also Like

More From Author