ஊரகப் பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் விலை பொருள்களை சந்தைப்படுத்தவும், குக் கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரிகளுக்கு எளிதாக சென்று வரும் வகையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 800 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக ஊரகப் பகுதிகளில் முதல் கட்டமாக 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அளித்த கோரிக்கைகள பரிசீலினை செய்து முன்னுரிமை அடிப்படையில் இந்த 100 பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.