சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டியின் வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குநருமான வாங்யீ, புது தில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமை அமைச்சர் மோடி ஆகியோரின் தலைமையில், சீன-இந்திய உறவு மீட்சி பாதைக்குத் திரும்பியுள்ளது. சீனாவும் இந்தியாவும், ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும், போட்டியாளர்கள் அல்ல என்று இரு நாட்டுத் தலைவர்கள் ஒரு மனதாகக் கருதுகின்றனர். இது, இரு தரப்பின் மிக முக்கியமான நெடுநோக்கு ஒற்றுமையை உருவாக்கியது என்று தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு இந்தியா பொறுப்பை ஏற்பதற்கு ஆதரவளித்து, கூட்டாக பிரிக்ஸ் முறைமை வளர்ச்சியை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்றும் வாங்யீ கூறினார்.
டோவல் கூறுகையில், நிலையான இந்திய-சீன உறவு, இரு தரப்பின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. நெடுநோக்கு பார்வையுடன் சீனாவுடனான உறவை அணுகி, சர்ச்சையை உரிய முறையில் சமாளித்து, கூட்டு வெற்றி பெறும் நிலைமையை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
