மார்ச் மாதத்தில் சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் திட்டப்படி நடைபெற்றன.
அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் அதி உயர் தலைவரான ஷிச்சின்பிங் 3 முறைப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைகளில் பங்கேற்று நாட்டின் வளர்ச்சி மற்றும் முக்கிய கொள்கைகள் பற்றி பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுடன் விவாதித்தார்.
மார்ச் 5ஆம் நாள் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் துவங்கிய போது, குறிப்பிட்ட நிலைமைக்கு ஏற்பச் செயல்படுத்தி உயர்தரமான உற்பத்தித் திறனை வளர்ப்பது பற்றிய பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் கருத்து மக்களிடையிலும் செய்தி ஊடகங்களிலும் பெரும் கவனம் ஈர்த்தது. அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்கம், உயர்தரமான வளர்ச்சியை முன்னேற்றுவதில் மிகவும் முக்கியமானது.
புத்தாக்கத்தை நாடுவது என்பது எதிர்காலத்தை நாடுவதாகும் என்று ஷிச்சின்பிங் பலமுறை சுட்டிக்காட்டினார். மேலும், பசுமை வளர்ச்சி என்பது உயர்தரமான வளர்ச்சியின் அடித்தளமாகும்.
உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், உயர் நிலை பாதுபாப்பு பணியின் மூலம் உயர் தர வளர்ச்சியை உத்தரவாதம் செய்வதிலும் பங்காற்ற வேண்டும் என்றும் நடப்பு மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டில் புதிதாக நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் வளத் துறை கமிட்டியிடம் ஷிச்சின்பிங் முன்வைத்தார்.