புதிய சாதனை படைத்த யுரேசியா சரக்கு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி

பட்டுப்பாதை எழுச்சியை வெளிக்கொணர்ந்து ஆசிய-ஐரோப்பிய ஒத்துழைப்பை ஆழமாக்குவது என்ற தலைப்பில், 2023ஆம் ஆண்டு யுரேசியா சரக்கு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி ஆகஸ்ட் 17ஆம் நாள் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் துவங்கியது.

ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜ்கிஸ்தான், பாகிஸ்தான், மங்கோலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கெடுத்துள்ளன. நடப்புப் பொருட்காட்சியில், சின்ஜியாங்கின் சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து நாடுகளும் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.


5 நாட்கள் நடைபெறும் இப்பொருட்காட்சின் போது, தியன்ஷான் கருத்தரங்கு, பட்டுபாதை தொழில் மற்றும் வணிக வளர்ச்சி பற்றிய பேச்சுவார்த்தை, மத்திய ஆசிய பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிந்தனை கிடங்குகளின் வளர்ச்சி பற்றிய சிறப்பு கருத்தரங்கு ஆகியவை நடைபெறுகின்றன.

70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடைய காட்சியரங்கில், முதலீட்டு ஒத்துழைப்பு, இறக்குமதிப் பொருட்கள், சரக்கு வர்த்தகம் ஆகிய 3 காட்சியிடங்கள் உள்ளன.

இப்பொருட்காட்சியில் பங்கெடுக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 1300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், வர்த்தக முதலீட்டை ஊக்குவிப்பதற்கான 33 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author