இவ்வாண்டில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெளிநாட்டவர்களுக்கு உகந்த சேவை வசதிகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில், வெளிநாட்டு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நேரடியாக சுரங்க ரயில் நிலையத்தில் நுழைய அனுமதி என்ற சேவை ஒன்றாகும்.
கடந்த செப்டம்பர் 13ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த சேவையைப் பயன்படுத்தும் போது, நுழைவுச்சீட்டு அல்லது கைப்பேசி செயலி தேவையின்றி, மாஸ்டர்கார்டு அல்லது விசா என்ற சின்னம் கொண்ட வங்கி அட்டையைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் நுழையலாம்.
அக்டோபர் 13ஆம் நாள் வரை, இந்த சேவைப் பயன்பாடுகளின் எண்ணிக்கை ஒரு திங்கள் காலத்தில் 30ஆயிரத்தைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜுலை 31ஆம் நாள், வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலா அனுபவங்களை மேம்படுத்தும் வகையில், “பெய்ஜிங் பாஸ்”என்ற அட்டை வெளியிடப்பட்டது.
இந்த அட்டை மூலம், பெய்ஜிங்கிலுள்ள சுரங்க தொடர்வண்டி, பேருந்து, டாக்ஸி மற்றும் பிற 300க்கும் அதிகமான நகரங்களிலும் பொது போக்குவரத்து வசதிகளை வெளிநாட்டவர்கள் பயன்படுத்தலாம். மேலும், பெய்ஜிங்கிலுள்ள 30 பெரிய பூங்காக்களிலும் 20 குறிப்பிட்ட கடைகளிலும் “பெய்ஜிங் பாஸ்” அட்டைப் பயன்படுத்தி சேவைகளை பெறலாம்.