சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், சேஜியாங் மாநிலத்தின் லீஷுவெய் நகரின் ஜீங்நிங் ஷே இனத் தன்னாட்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு இனத் தலைமை ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு கடிதம் மூலம் பதிலளித்தார்.
அவர் ஜீங்நிங் மாவட்டம் நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தனது விருப்பங்களையும் கூறினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக, தேசிய இன ஒற்றுமை, தனிச்சிறப்பு வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் ஜீங்நிங் மாவட்டம் மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெற்றுள்ளது.
புதிய யுகத்தில், இம்மாவட்டத்தின் பல்வேறு இனத் தலைமை ஊழியர்கள் மற்றும் பொது மக்கள், கட்சி மத்திய கமிட்டியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளைச் செயல்படுத்தி, தேசிய இனப் பிரதேசத்தின் உயர்தர வளர்ச்சி மற்றும் கூட்டுச் செழிப்பை ஆக்கமுடன் முன்னேற்றி, சீன நவீனமயமாக்கப் போக்கில் புதிய வளர்ச்சி அத்தியாயத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
