தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் அவர்களது கட்சி சின்னங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள். பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்குகிறது. 234 தொகுதிகளில் 5 சதவீதத்திற்கு மேற்பட்ட இடங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குவது வழக்கம்.
இதற்காக தேர்தல் நடக்கும் காலக்கட்டத்தில் இருந்து 6 மாதத்திற்கு முன்பே தேர்தல் ஆணையத்தில் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன்படி, இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2026 மே 10 நிறைவடைய உள்ள நிலையில் வரும் நவம்பர் 11ம் தேதி முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்று, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டிய தேதிகளும் அறிவிக்கப்ட்டுள்ளது.