இன்று சென்னையில் 7 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை..!

Estimated read time 0 min read

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகட வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டம், புரசைவாக்கம் வட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அ/மி கங்காதரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவின் ஒரு பகுதியாக வருகிற 06.06.25 வெள்ளிக்கிழமை (அன்று) இத்திருக்கோயில் வரலாற்றில் முதல் முறையாக புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அம்பாள் மரத்தேர் ஆகிய இரண்டு திருத்தேர்கள் பெருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு 06.06.2025 இக்கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள கீழ்க்காணும் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடதெரிவித்துள்ளார். இவ்விடுமுறைக்கு ஈடாக வரும் 21.06.2025 (சனிக்கிழமை) கீழ்க்காணும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4000ஆயிரம் மாணவர்களுக்கு நாளை விடுமுறை கிடைத்துள்ளது. .

Please follow and like us:

You May Also Like

More From Author