சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் சேஜியாங் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சீன நவீனமயமாக்கத்தின் முன்னோடியான சேஜியாங், முன்னிலையில் நவீனமயமாக்க கட்டுமானத்தை விரைவுபடுத்துவது குறித்து அவர் முன்மொழிவுகளை வழங்கினார்.
உண்மைப் பொருளாதாரத்தை, நவீனமயமாக்கத் தொழில்துறை அமைப்புமுறையின் அடிப்படையாக சேஜியாங் வைக்க வேண்டும். தயாரிப்புத் தொழிலின் புத்திசாலித்தனமயமாக்கம் மற்றும் பசுமைமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நவீன வேளாண்மை குறித்து அவர் கூறுகையில், நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையிலான இடைவெளி, பிரதேசங்களுக்கிடையிலான இடைவெளி, வருமான இடைவெளி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்றார்.
சர்வதேச மேலாண்மை குறித்து அவர் பேசுகையில், பல்வேறு நிலைகளிலான சமூகக் காப்புறுதி அமைப்புமுறையை மேம்படுத்தி, அடி மட்ட மேலாண்மை அமைப்புமுறையையும், மேலாண்மை திறனின் நவீனமயமாக்கத்தையும் முன்னேற்ற வேண்டும் என்றார்.
மேலும், அன்னிய முதலீட்டைப் புத்தாக்க வழிமுறையில் பயன்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்க வேண்டும் என்றும், சேவைத் துறைக்கான திறப்பு, எண்ணியல் வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சேஜியாங் முதலில் செயல்பட வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
தவிரவும், நவீன நாகரிகம் குறித்து அவர் கூறுகையில், பண்பாட்டு மரபு செல்வத்துக்கான பாதுகாப்பை சேஜியாங் வலுப்படுத்தி, பாரம்பரிய பண்பாட்டின் புத்தாக்க வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.