தென் சீனக் கடலில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் முன்முயற்சியை பிரதேச நாடுகள் எடுக்க வேண்டும்

சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தென் சீனக் கடல் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறுகையில், தென் சீனக் கடல் பிரச்சினையைக் கையாள சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் ஞானமும் திறனும் உள்ளன என்று தெரிவித்தார்.

சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 2664 நபர்களிடம் வினாத் தாள் மூலம் கருத்து கணிப்பை நடத்தியது. அதன் முடிவின்படி, இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள நாடுகளின் தலையீடு தான், தென் சீனக் கடலில் ஏற்பட்ட நெருக்கடிக்கான முக்கிய வினையூக்கி என்று கருதப்படுவதோடு, அமைதியான முறையில் சுதந்திரமாக தென் சீனக் கடல் சர்ச்சையைத் தீர்ப்பது என்பது ஒருமித்த கருத்தாக உள்ளது. மேலும், தென் சீனக் கடல் பிரச்சினை சர்வதேச சட்டத்தின்படி அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று 84.6 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பிரதேசத்துக்கு அப்பாலுள்ள பெரிய நாடுகளின் தொடர்ச்சியான தலையீடு, பிரதேச நெருக்கடியைத் தீவிரப்படுத்துவதோடு, உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று 74.4 விழுக்காட்டினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாண்டு சீனா-ஆசியான் பன்முக உத்திநோக்கு கூட்டுறவு நிறுவப்பட்ட 5ஆவது ஆண்டு நிறைவாகும். தற்போது தென் சீனக் கடலில் நடத்தை விதிமுறையை உருவாக்குவதற்கான முக்கிய தருணத்தில், பல்வேறு தரப்புகள் வாய்ப்புகளை இறுகப்பற்றி, இடையூறுகளை நீக்கி, தென் சீனக் கடலை, அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான கடலாக கட்டமைத்து, ஆசியான் நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று கருதப்படுகிறது.

You May Also Like

More From Author