வேலூரில் உள்ள உலகப்புகழ் பெற்ற கிறித்துவ மருத்துவக் கல்லூரி (CMC) மருத்துவமனை மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் (ED) இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனை வளாகம், அங்குள்ள மருத்துவர்களின் விடுதிகள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் அல்லது வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி ஆதாரங்களில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் குடியிருப்புகளில் அமலாக்கத்துறை (ED) ஆய்வு
