சீன அரசவையின் தகவல் பணியகம் ஜூன் 24ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சீன மக்கள் குடியரசின் தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற ஊக்குவிப்பு சட்டம் பற்றியும் நாட்டின் தேசிய இன விவகாரத்துக்கான பணிகள் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய காலக்கட்டத்தில் அரசியல் அமைப்புச் சட்ட விதிகளை அமலாக்குவதற்கும், தேசிய இன விவகாரங்களைக் கையாண்டு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வதற்கும், தேசிய இன ஒற்றுமை மற்றும் முன்னேற்ற ஊக்குவிப்பு சட்டமானது அடிப்படை சட்டமாகும். இச்சட்டம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னுரை கொண்ட முதலாவது சட்டமாகும். அரசியல், கோட்பாடு, அறிவிப்பு, வழிகாட்டுதல் ஆகிய துறைகளில் இந்தச் சட்டத்தின் சிறப்புகளை இது வெளிப்படுத்துகிறது.
மேலும், 2012 முதல் 2025ஆம் ஆண்டு வரை, உள்மங்கோலியா, குவாங்சி, நிங்சியா, சிட்சாங், சின்ஜியாங் ஆகிய 5 தன்னாட்சிப் பிரதேசங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு, 3.25 லட்சம் கோடி யுவானிலிருந்து 8.66 லட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. சீன தனிச்சிறப்புடைய நவீனமயமாக்க கட்டுமானத்தின் புதிய பயணத்தை பல்வேறு இன மக்கள் சேர்ந்து தொடங்கியுள்ளனர் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
