தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புரட்சிகரமான இயக்குநர், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா(84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் ஆழந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் அரும்பெரும் கலைச் சேவையைப் போற்றும் வகையிலும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையிலும், தமிழ் திரையுலகம் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது.
இதன்படி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் திரைப்பட மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இயக்குநர் பாரதிராஜா மறைவு: இன்று படப்பிடிப்புகள் ரத்து;
