சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சத்தீஸ்கர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியில் இன்றுஒரு பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த மோதல் காரணமாகச் சில பெட்டிகள் தடம் புரண்டதாகவும், இதில் பல பயணிகள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை, இருப்பினும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகம், ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் ரயில் விபத்து: இரண்டு ரயில்கள் மோதி விபத்து; பலர் பலியானதாக அச்சம்!
