சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் முதல் நாள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத் தலைவர் முகமது பின் சயீது அல் நஹ்யானைத் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டு இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்வுரையாடலின் போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பரஸ்பர நம்பிக்கையுடைய நண்பர்களாகவும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் நட்புக் கூட்டாளியாகவும் விளங்குகின்றன.
இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், இரு நாட்டுறவு ஆரோக்கியமாகவும் நிலையாகவும் வளர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், தான் சீன-ஐக்கிய அரபு அமீரக உறவுக்குப் பெரும் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், அரசுத் தலைவர் முகமதுடன் இணைந்து 40ஆவது ஆண்டு நிறைவைப் புதிய துவக்கமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னெடுக்கப் பாடுபட விரும்புவதாகவும் கூறினார்.
இரு நாட்டு மக்களுக்கு மேலும் சிறப்பாக நன்மை படைப்பதோடு, பிரதேசம் மற்றும் உலகின் அமைதிக்கும் நிலைப்புத் தன்மைக்கும் மேலதிக பங்களிப்பை ஆற்ற விரும்புகிறேன் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.