வர்த்தக கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய சுங்கவரி விதித்தது குறித்து சீனா கருத்து
60 வர்த்தக கூட்டாளிகள் மீது புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 24ஆம் நாள் கூறுகையில், அனைத்து வகையான ஒருதரப்பு சுங்கவரி நடவடிக்கைகளையும் சீனா எதிர்ப்பதாகவும், சுங்கவரி போர்களும் வர்த்தக போர்களும் எந்த தரப்புகளின் நலனுக்கும் பொருத்தமற்றது என்றும் தெரிவித்தார்.
