கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு ஷிச்சின்பிங் ஆறுதல்

வெனிசுலாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 26ஆம் நாள் அந்நாட்டின் செயல் அரசுத் தலைவர் ரோட்ரிகஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வெனிசுலாவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடும் உயிரிப்பு மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டதை அறிந்ததில் அதிர்ச்சி அடைந்தேன். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு உளமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கின்றேன் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

மேலும், வெனிசுலாவின் நிவாரணப் பணிக்கும் பேரிடருக்குப் பிந்தைய புனரமைப்புக்கும் சீனா உதவியளிக்கும் என்றும், வெனிசுல அரசின் தலைமையில் வெனிசுல மக்கள் வெகுவிரைவில் பேரிடரை வென்றெடுத்து தாயகத்தை மறுசீரமைக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author