மனித குலப் பொது எதிர்காலச் சமூக ஆராய்ச்சி மையத்தின் தொடக்கவிழா ஜனவரி 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ இந்த ஆராய்ச்சி மையத்தைத் திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனையின் முக்கியப் பகுதியாகும். இது சிறப்புமிக்க தத்துவார்த்த மதிப்பையும், சகாப்தத்தின் சிறந்த முக்கியத்துவம் மற்றும் தொலைநோக்குடன் கூடிய உலகச் செல்வாக்கையும் கொண்டுள்ளது.
மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது என்பது, மோதல் மற்றும் எதிரெதிர் நிலைக்குப் பதிலாக அமைதியான முறையில் வளர்ச்சியடைய வேண்டும் என்னும் உயரிய நோக்கிலேயே மனித குலப் பொது எதிர்காலச் சமூக உருவாக்கம் என்னும் கருத்து எழுந்துள்ளது.
அது போன்றே முழுமையான பாதுகாப்புக்குப் பதிலாக கூட்டு பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். இழப்பு என்பது லாபம் பெறுவதற்கான விளையாட்டு என்பதைக் கைவிட்டு ஒன்றுக்கு ஒன்று கூட்டு வெற்றி பெற வேண்டும்.
நாகரிகங்களுக்கிடையிலான மோதல்களைத் தடுத்து பரிமாற்றம் மேற்கொண்டு ஒன்றுக்கு ஒன்று கற்றுக்கொள்ள வேண்டும். நாடுகளுக்கிடையிலான உறவை அமைதியான சகவாழ்விலிருந்து கூட்டு விதி வரை முன்னேற வேண்டும். உலக அமைதி மற்றும் வளர்ச்சியின் இலட்சியத்தை மேம்படுத்துவதற்கு வலுவான உயிராற்றல் ஊட்ட வேண்டும் என்றார்.