சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி வரலாற்றுச் சாதனை!  

Estimated read time 0 min read

சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28). அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.
அங்கு பேசிய பிரதமர் மோடி, “இந்த சபையில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற கௌரவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் வாழ்த்துகளை உங்களுக்கு நான் கொண்டு வந்துள்ளேன்.” என்று குறிப்பிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலில் பார்வையிட்ட இந்தியப் பெருங்கடல் தீவு நாடு சீஷெல்ஸ் தான் என்றும், ஒரு தசாப்தத்திற்குப் பிறகும் அந்தப் பிணைப்பு நீடிப்பதாகவும் கூறினார்.

More From Author