பாரம்பரிய கிராமம் மற்றும் கட்டிடங்களின் பாதுகாப்பில் சீனா கவனம்

சீன நகர் திட்டக் கழகத்தின் பாரம்பரிய கிராமம் மற்றும் கட்டிடங்களின் பாதுகாப்பு கிளை 28ம் நாள் பெய்ஜிங் மாநகரில் நிறுவப்பட்டது. பாரம்பரிய கிராமம் மற்றும் கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான வரையறையை முழுமைப்படுத்தி, பாதுகாப்பு, பராமரிப்பு, புதுப்பித்தல் முதலிய துறைகளின் தொழில் நுட்ப வரையறையை நுணுக்கமாக்க வேண்டும் என்று சீனாவின் உறைவிடம் மற்றும் நகர-கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் துணை அமைச்சர் ஜின் ஹாய் ஷியாங் 28ம் நாள் தெரிவித்தார்.

இதுவரை, சீனாவில் 8155 கிராமங்கள், பாரம்பரிய கிராமப் பாதுகாப்பு பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேலான கிராமங்கள், மாநில நிலை பாதுகாப்பு பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author