கிர்கிஸ்தானில் எழுத்து மூல உரை நிகழ்த்திய சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்

கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ஜபரோவின் அழைப்பை ஏற்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், கிர்கிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 30ஆம் நாள் பிற்பகல் அந்நாட்டின் பிஷ்கெக் நகரைச் சென்றடைந்தார்.

அப்போது ஷி ச்சின்பிங் எழுத்து மூல உரை நிகழ்த்துகையில், கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளின் ஒத்துழைப்பு, உயர்வேக வளர்ச்சியடைந்த பொற்க காலத்தில் உள்ளது. இரு தரப்பு வர்த்தக தொகையும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்பும் உயர்நிலையை எட்டியுள்ளன. சீன-கிர்கிஸ்தான்-உஸ்பெகிஸ்தான் இருப்புப்பாதை உள்ளிட்ட பெரிய திட்டப்பணி தடையின்றி நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பு சாதனைகள் இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்துள்ளன என்றார். மேலும், இப்பயணத்தின்போது, சீன-கிர்கிஸ்தான் உறவு, பல்வேறு துறைகளிலுள்ள இரு நாட்டு ஒத்துழைப்பு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து, அரசுத் தலைவர் ஜபரோவுடன் ஆழமாக கருத்துக்களைப் பரிமாற்றிக் கொள்ள இருப்பதாகவும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிஷ்கெக் உச்சி மாநாட்டில் பங்கெடுத்து, பல்வேறு தரப்புகளுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

You May Also Like

More From Author