சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் ஜுலை 8ஆம் நாள் ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா தலைமைச்செயலாளர் குட்ரேஸைச் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பில் லீ ச்சியாங் கூறுகையில், ஐ.நா நிறுவப்பட்டதன் 80 ஆண்டுகளில், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிகாத்து, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. தற்போதைய உலகில் அதிகரித்து வரும் உறுதியற்ற காரணிகளால், ஐ.நா சீராக பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது பற்றிய கருத்து மற்றும் மூன்று உலகளாவிய முன்மொழிவுகள், பலதரப்புவாதத்தையும், ஐ.நாவின் இலட்சியத்தையும் சீனா ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது என்றும், ஐ,நாவுடன் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்
நீண்டகாலமாக பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, ஐ.நாவின் பணிகளை உறுதியாக ஆதரிக்கும் சீனாவுக்கு குட்ரேஸ் நன்றி தெரிவித்தார். சீனாவுடன் இணைந்து ஒத்துழைப்பு வலுப்படுத்தி, ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அதிகாரத்தைப் பேணிகாத்து, பலதரப்புவாதத்தை ஆதரித்து, ஒருதரப்புவாதத்தை எதிர்த்து, காலநிலை மாற்றம் முதலிய உலகளாவிய அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து, செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய மேலாண்மையை வலுப்படுத்தி, உலக அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதை ஐ,நா எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.