சியுலொங் எனும் தென்துருவ பனிக்கட்டி உடைக்கும் அறிவியல் ஆய்வு கப்பல் ஏப்ரல் 8ஆம் நாள் ஷாங்காய் மாநகருக்குத் திரும்பியுள்ளது.
சீனாவின் 41வது தென்துருவ ஆய்வுப் பயணத்தின் முக்கிய கடமைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலிருந்து 118 நிறுவனங்களைச் சேர்ந்த 516 பேர் இப்பயணத்தில் கலந்துகொண்டனர். இப்பயணம் 3 காலக்கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இதனைத் தவிர, யோங்சாங் எனும் ஆய்வு கப்பல் ஜனவரி 23ஆம் நாள் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது.
தற்போது, சியுலொங்-2 எனும் ஆய்வு கப்பல் திட்டப்படி, ஆய்வுப் பயணத்தை முடித்துவிட்டு, ஜூன் திங்களில் ஷாங்காய் மாநகருக்குத் திரும்பும்.