தற்போதைய உலகம் முன்எதிர்பார்ப்பைத் தாண்டி, அமைப்புமுறை ரீதியில் ஆழமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
2017ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவுக்கான தூதர்களைச் சந்தித்த போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்கண்டிராத 3 மாற்றங்கள் மற்றும் தற்போதைய உலக நிலைமை பற்றி விளக்கிக் கூறினார்.
முதலில், புதிதாக வளரும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் மறுமலர்ச்சி முன்கண்டிராத வேகத்தை அடைந்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரிலுள்ள ஜியி மின்சார கருவி மருத்துவ குழுவின் ஆய்வு மையம்
அடுத்து, புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்ப புரட்சி மற்றும் தொழில் துறையின் மறுசீரமைப்பு கொண்டு வரும் புதுப்பிதல் மற்றும் தீவிரமான போட்டி, முன்கண்டிராத அளவில் உள்ளது.

சாங் ஏ-6 சந்திர மண்டல ஆய்வுக் கலம் பூமிக்குக் கொண்டு வரும் சந்திர பண்டல மாதிரிப் பொருள்
மூன்றாவது, உலகின் மேலாண்மை அமைப்புமுறை, சர்வதேச நிலைமையின் மாற்றத்துக்கு ஏற்றதல்ல. சமமற்ற நிலை முன்கண்டிராத அளவைக் காண்கிறது.
தற்போதைய உலகம் சாலைக்குறுக்கில் உள்ளது. புதிய யுகத்தில், சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங், சீனாவின் 5000 ஆண்டுகால அறிவுத்திறமையைத் தொகுத்து, நாட்டின் மேலாண்மையை உருவாக்கி, மேலை நாடுகளின் நவீனமயமாக்கத்தின் வளர்ச்சிப் பாதைக்கு மாறுபட்ட, தனி சிறப்பு வாய்ந்த சீனாவின் வளர்ச்சிப் பாதையைக் கண்டறிந்தார்.
150க்கும் மேலான நாடுகள் மற்றும் சுமார் 30 சர்வதேச அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆவணங்களில் சேர்க்கப்பட்ட மனித குலத்தின் பொது சமூகம் கண்ணோட்டம் ஆகியவை சீனாவின் மேலாண்மைக் கருத்துக்களில் பிரதிநிதிகளாகத் திகழ்கின்றன.

சீனாவின் ஷாங்காய் மாநகரில் பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் தலைமையகக் கட்டிடம்
சீனா, வரலாற்றுச் சாலைக்குறுக்கில் நின்று, 19ஆவது நூற்றாண்டில் தாக்கப்பட்ட பழைய நாடாகவும் பனிப் போர் சிந்தனை எனும் பின்னணியில் போட்டியிட்ட வேட்பாளராகவும் அல்ல. மாறாக, சீனா புதிய சர்வதேச உறவை உருவாக்கும் ஆற்றலாக மாறி உள்ளது.