நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு ஒரு நாள் முன்னதாக, அண்டை நாடான இந்தியாவில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கிச் செய்தி மாற்று அமைப்பில் (AMSS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறு
