சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அம்மையார் ஆகியோர், உள்ளூர் நேரப்படி மே 6ஆம் நாள் முற்பகல் பாரிஸ் நகரில் மூன்று தரப்புச் சந்திப்பு நடத்தினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு எனது வெளிநாட்டுப் பயணத்தின் முதலாவது நாடு பிரான்ஸ் ஆகும்.
சீனா எப்போதுமே நெடுநோக்கு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சீன-ஐரோப்பிய உறவை அணுகி வருகிறது. சீன-பிரான்ஸ் உறவும், சீன-ஐரோப்பிய உறவும் ஒன்றை ஒன்று முன்னேற்றி, கூட்டாக வளர்ச்சியடைய விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய கொந்தளிப்பான சூழ்நிலையில், உலகத்தின் முக்கிய 2 ஆற்றல்களான சீனாவும் ஐரோப்பாவும், பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புகளில் ஊன்றி நின்று, நெடுநோக்கு தொடர்புகளை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நெடுநோக்கு நம்பிக்கையை அதிகரித்து, நெடுநோக்கு ஒத்தக் கருத்துகளை உருவாக்கி, இரு தரப்புறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் புதிய பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.