ஈரான் நாட்டுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருக்கும் நாடுகள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானில் நிலவி வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணம் காட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றான இந்தியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா சில வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், தற்போது ஈரானுக்கான இந்த புதிய வரி விதிப்பும் சேர்ந்தால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரி 75 சதவீதம் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரான் வர்த்தக நாடுகளுக்கு அமெரிக்கா 25% வரி விதிப்பு;இந்திய ஏற்றுமதி துறையில் பாதிப்பு?
