வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் சாய் ஹோப், புதுடெல்லியில் இந்தியாவுக்கு எதிரான நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளில் சதம் அடித்து, தனது எட்டு ஆண்டு காலச் சதப் பஞ்சத்தை முறியடித்து ஒரு குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார்.
சாய் ஹோப்பின் 103 ரன்கள் அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 2967 நாட்களுக்குப் பிறகு வந்த முதல் டெஸ்ட் சதம் ஆகும்.
இதற்கு முன்னர் அவர் 2017 இல் இங்கிலாந்துக்கு எதிராகச் சதம் அடித்திருந்தார்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது மூன்றாவது சதம் மற்றும், அவர் சதம் அடித்த இரண்டாவது அணி இந்தியா ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு வருட போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சாய் ஹோப்
